Seed Certification
சிறப்பு விதை நேர்த்தி
விதை பிரைமிங் செய்தல்
வகைகள்
  • ஹைட்ரோ பிரைமிங் (விதை பருமனைப் போல் இரு மடங்கு நீரை உபயோகித்தல்)
  • ஹாலோ பிரைமிங் (சோடியம் குளோரைடு உப்புக் கரைசலை பயன்படுத்துதல்)
  • சவ்வூடு பரவல் பிரைமிங் (பாலி எத்திலீன் கிளைக்கால் சவ்வூடு பரவல் கரைசலை பயன்படுத்துதல்)
  • மணல் ரீதியான பிரைமிங் (ஈரத்தன்மையுடைய மணலை உபயோகித்தல்)
மேற்காணும் முறைகளில், விதைகளை அந்தந்த கரைசலில் தேவையான அடர்த்தியில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைத்த பிறகு விதைகள் உலர்த்தி பழைய ஈரப்பதத்திற்கு கொண்டு வர வேண்டும். நான்காவது முறையில் விதைகளை தேவைப்படும் நீர்த்தேக்க திறனில் உள்ள ஈர மணலில் கலக்க வேண்டும். பிறகு இதனை ஒரு துளையிட்ட பிளாஸ்டிக் பைகளில் அடைத்து அதனை ஒரு தட்டில் மேல்கூறிய கூறிய நீர்த்தேக்க திறனுடைய மணலில் ஆழத்தில் - வைக்க வேண்டும்.
பயிர் பிரைமிங் தொழில் நுட்பங்கள்
தக்காளி ஹைட்ரோ பிரைமிங் (48 மணி நேரம்)
கத்தரி மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)
மிளகாய் மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)
வெங்காயம் மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)
கேரட் ஹைட்ரோ பிரைமிங் (36 மணி நேரம்)
பீட்åட் ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)
வெண்டை மண்முறை 60 சதம் (3 மணி நேரம்)
முள்ளங்கி ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)
கடுகு ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)

வெவ்வேறு நீர்த்தேக்க திறனை உருவாக்குதல்
30 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு கிலோ உலர் மணலுக்கு 90 மி.லி தண்ணீர்
40 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு கிலோ உலர் மணலுக்கு 120 மி.லி தண்ணீர்
60 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு கிலோ உலர் மணலுக்கு 180 மி.லி தண்ணீர்
80 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு கிலோ உலர் மணலுக்கு 240 மி.லி தண்ணீர்
100 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு கிலோ உலர் மணலுக்கு 300 மி.லி

நன்மைகள்:
  • முளைப்புத் திறனை அதிகரிக்கின்றது.
  • விதை முளைப்பு வேகத்தை அதிகரிக்கின்றது.
  • நீர் மற்றும் வெப்பத்தினால் வரும் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனை உருவாக்குகின்றது.
  • விதை சேமிப்பு காலத்தை அதிகரிக்கின்றது.
  • சிறிய விதைகளுக்க இது மிகவும் சிறந்த தொழில் நுட்பமாகும்.
  • விளைச்சலை அதிகரிக்கின்றது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam